தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோவிலில் 6ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி தோஷம் போக்கும் மூலை அனுமாருக்கு 1008லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் பரிகார அர்ச்சனை தீபாராதனை நடந்தது. மூலை அனுமாரின் மணி கட்டிய வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் பக்தர்கள் சனி தோஷம் நீங்க பிரதி அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் 18 அகல் தீபமேற்றி 18 வலம் வந்து ரூபாய் 18/-ஐ நேர்த்தி கடன் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் எறிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தார்கள்.