திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பழ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பூஜைகளை ஆஞ்சநேய தாஸன் வலஙகை என்.ராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.