திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்(ஆதிதிராவிடர் குடியிருப்பு) உலக மகளிர் தின விழா ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை இராஜிவி தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், புலவர் ந.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் நெடுமாறன் வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக, தெள்ளார் முதன்மை தீயணைப்பு அலுவலர் கோ.விஜயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் அனைத்து மாணவிகளும் சாதனைப் பெண்களாக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் வழக்கறிஞர் சா.இரா.மணி, இயக்குநர் விஜய் ஆதிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *