வருகின்ற 21-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் UMT ராஜா, இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு பிரமிக்கத்தக்க கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.


​மிகவும் சிறிய அளவிலான ஒரு பாதாம் பருப்பில், இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்கா மதினா உருவத்தை மிக நுணுக்கமாக செதுக்கியுள்ளார். தையல் ஊசி மற்றும் சிறிய கத்தியின் உதவியுடன், சுமார் 7 மணி நேரம் தொடர் முயற்சி செய்து இந்த நுண்ணிய சிற்பத்தை அவர் வடிவமைத்துள்ளார்.


​ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்குத் தனது கலைத்திறன் மூலம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளதாக UMT ராஜா தெரிவித்துள்ளார். இவரது இந்த அசாத்திய முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *