துறையூர் மார்ச் -07
திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினமான 07-03-2026 அன்று சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், குற்றவியல் நீதிமன்ற நடுவர் நர்மதா ராணி ஆகியோர் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் துறையூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் முகமது ரபிக், துணைத் தலைவர் எஸ் பி பாஸ்கரன், துணைச் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் நரேஷ் குமார், அரசு வழக்கறிஞர் சந்திரமோகன் , முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலாளர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்றைய சூழலில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.தன்னலம் மற்ற பங்களிப்பை நாட்டிற்கும் வீட்டிற்கும் தந்து கொண்டிருக்கும் மகளிரைபோற்றும் வகையில் இந்த மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகளிர் வழக்கறிஞர்களுக்கும், மகளிர் பணியாளர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் வழக்கறிஞர்கள் ரம்யா, தனலட்சுமி, கௌரி, வித்யாலட்சுமி பாக்கிரதி, மலர், பிருந்தா,சரிகா, ஹிரோஷ், தமிழ்மணி, கோகிலா,முத்துக்குமார், செந்தில்குமார், நிர்மல்குமார், சுரேஷ்குமார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர. விழா நிறைவில் நீதிமன்ற பணியாளர் தமிழ்ச்செல்வி நன்றி உரையாற்றினார்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *