சக்திவேல் செய்தியாளர் குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி தொகுதியில் நூறு சதவீதம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி உள்ளதாக அமைச்சரை புகழ்ந்து நன்றி கூறிய பொதுமக்களின் செயலால் நேகழ்ச்சியடைந்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் அமைந்துள்ள அய்யன் ஏரி கரையில் நகர்புற மேம்பட்ட திட்ட நிதியில் இருந்து மூன்று கோடியே இருபத்தி நான்கு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நடைபாதையினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த நடைபாதையில் மக்களோடு மக்களாக நடந்து சென்று மக்களிடம் உரையாடினார் அப்பொழுது பொதுமக்களில் பெரும்பாலானோர் பேசுகையில் 1996 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை தன்னிறைவு அடைந்த தொகுதியாக மாற்றி உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை புகழ்ந்ததோடு நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.
இதை கேட்டு கொண்டிருந்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நெகிழ்ச்சி அடைந்து இன்னும் வாய்ப்பு கிடைக்கும் நிலையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த உள்ளேன் என அவர் மக்களிடையே வாக்குறுதி அளித்தார்.
இதற்கு மக்களாகிய எல்லோரும் மீண்டும் திமுகவினை வெற்றி பெற செய்யுங்கள் என கோரிக்கை வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பிராயலு
நகர செயலாளர் தன. தமிழ்ச்செல்வன் வடலூர் நகராட்சி ஆணையர் மல்லிகா பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் தேமுதிக நகர செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.