தாராபுரத்தில், அடுத்தடுத்து கார், வேன், அரசு பஸ்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலை ரவுண்டானா வில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலில், திருப்பூர் நோக்கி செல்ல பச்சை நிற சிக்னலுக் காக, கார், வேன் மற்றும் 2 அரசு பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக காத்து நின்றன.
அங்கு பச்சை நிற விளக்கு எரிந்த தும், முதலில் நின்ற கார் புறப்பட்டது. அந்த கார் திருப்பூர் சாலை யில் 100 அடி தூரம் சென்றதும், அந்த காரின் டிரைவர் திடீ ரென்று பிரேக் பிடித்தார். இதனால் அதற்கு பின்னால் வந்த வாக னங்கள் அடுத்தடுத்து மோதியது.
அதன்படி பிரேக் பிடித்து நிற்ற கார் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இந்த வேன் மீது, திருச்செந்தூரில் இருந்து கோபி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இந்த அரசு பஸ் மீது, மது ரையில் இருந்து கோவை நோக்கி சென்ற மற்றொருஅரசு பஸ் மோதியது. இந்த தொடர் விபத்தால் அரசு பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அலறினர்.
இந்த விபத்தில் திருச்செந்தூரில் இருந்து கோபி நோக்கிச் சென்ற அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. அதே போல் மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டி ருந்த அரசு பஸ்சின் முன் பக்க பகுதி சுக்குநூறாக உடைந்தது. அதே போல் வேனின் பின்பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் கார், வேன், அரசு பஸ்களில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் அந்த சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், தாராபுரம் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்களில் பயணம் செய்த பயணிகளை மாற்றுப்பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.