தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.3.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகள் (லிப்ட்) பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெரும் திரளான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய வரும் இந்த திருக்கோவிலில் குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் கோவிலின் மேல்பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததன் பேரில் மின்தூக்கிகள் அமைக்கும் திட்டம் அரசின் அனுமதியுடன் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக மூத்த குடிமக்கள் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ 3.55 கோடி செலவில் 2 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்து சமய அறநிலைதுறையில் ரூ.8,100.70 கோடி மதிப்பிலான 29,479 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.4.346 கோடி மதிப்பிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் சேகர்பாபு, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆகியோர் ரிப்பன் வெட்டி பக்தர்களின் பயன்பாட்டிற்கு 2 மின்தூக்கிகள் திறந்து வைத்தனர்.

இந்த திட்டத்தில் நவீன வசதிகளுடன் மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் கோவில் மேல்பகுதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும் மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வந்ததை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.இந்த வசதி குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

விழாவில் அமைச்சர் கோவி.செழியன், எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, அன்பழகன், எம்.எல்.ஏ, துணை மேயர் சுப.தமிழழகன்,காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், மனித நேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் பாதுஷா,இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சிவக்குமார். திருக்கோயில் தக்கார் சுவாமிநாதன். பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி, செயல் அலுவலர் உமாதேவி, செயற்பொறியாளர் விஜயகுமார் உதவி ஆணையர்கள் ஹம்சன்,அஸ்வினி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *