தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சார்பில் உலக மகளிர் தின விழா,பேரவை கூடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரும் , அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை பேராசிரியர் முனைவர் இரா. இந்துவரவேற்றார்.
முதல் நிகழ்வாக தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆட்சிக்குழு உறுப்பினர் துணைவேந்தர் மருத்துவர் முனைவர் பெ. பாரதஜோதி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி பெண்களின் முக்கியத்துவம் குறித்து கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் ஜெ. தேவி பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்கு பற்றி நோக்கவுரையாற்றினார். உரையாற்றினார் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்,பதிவாளர் கோ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிறுவனர் திருமதி புனிதா கணேசன்,தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னாள் உதவிப் பதிவாளர்,திருமதி வ. கோசலை, நாகப்பட்டினம், கே.பி.எஸ் கல்வியியல் கல்லூரி, நிறுவனர் திருமதி ஏ கே கனிமொழி பன்னீர்செல்வம் ,புதுக்கோட்டை திரைப்படப் பாடகி திருமதி ராஜலெட்சுமி செந்தில், தஞ்சாவூர்,மேலகொருக்கப்பட்டு, விஜய் டி.வி.புகழ் ச. சரண்ராஜா, ஆகியோர் பெண்களின் பெருமைகளை எடுத்துக் கூறினார்கள்.
சாதனை பெண்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.பல்வேறுகல்வித் துறைகளில் சாதனை படைத்த, பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் அகராதியியல் துறை,இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செ.த. ஜாக்குலின் நன்றி கூறினார். இதில் அனைத்து துறை பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,
மாணவ ,மாணவிகள் மற்றும் அலுவலக நிலை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
.