திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கருணீகர் சங்க கிளை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை பயிலும் 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கௌரவ தலைவர் ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் தலைமை தாங்கினார்.

கிளை தலைவர் வி. விஜயகுமார், செயலாளர் எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எ.இராஜசேகரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு கருணீகர் சங்க நிர்வாகி ஸ்ரீதேவி துரை அரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சம்பத் குமார், கிளை பொறுப்பாளர்கள் மோகன் குமார், சீதாலட்சுமி, பாரதி, கஸ்தூரி உள்ளிட்ட 90 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க நிர்வாகி இரா.அருள்ஜோதி நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *