துறையூர் மார்ச் -10
திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு நகரம் 20 வது வார்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மோகன் அறிவுறுத்தலின் படி
துறையூர் தெற்கு நகர இளைஞரணி செயலாளர் ஆர்.அரவிந்த் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட இணைசெயலாளர் தளபதி மதன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து கோடைகால வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு இளநீர், மோர், நன்னாரி சர்பத், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பொருட்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான “விசில்” குழந்தைகளுக்கும் கழகத்தினருக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், துறையூர் நகர செயலாளர் (தெற்கு ) தளபதி வினோத், இளைஞரணி நகர இணைசெயலாளர் முகமது ஜாவித், 22வது வார்டு செயலாளர் சசி, சதாசிவம், நாகராஜ், 23 வது வார்டு நிர்வாகிகள் விஜயகுமார், ராஜசேகர், கார்திக் மற்றும் தவெக நிர்வாகிகள்,மகளிர் நிர்வாகிகள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *