கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் பணி மாறுதல் பெற்று மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி அலுவலராக பணியாற்றிய சிவக்குமார் கண்டமங்கலம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.