கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருக்ஷம் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலமுருகன்,யூலு நிறுவனத்தின் பிராண்ட் டைரக்டர் வருண் பிள்ளை மற்றும் கன்ட்ரி மேனேஜர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யூலு செயலி வாயிலாக பதிவு செய்து இ.வி.வாகனங்களை ஒரு நாள் அல்லது தொடர்ந்து பல நாட்கள் அல்லது மாத வாடகைக்கும் யூலு வாகனங்கள் கிடைக்கும் என திட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்..
இந்த கூட்டாண்மை திட்டம் மூலம் கோவையில் டெலிவரி பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு குறைந்த செலவில் மின்சார இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பெறும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் செலவு குறைப்பு மற்றும் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த முயற்சி கோவையில் பசுமை போக்குவரத்தையும் நிலையான நகர வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் முக்கியமான படியாக அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.