கூத்தாநல்லூர்.,

ஈரான் மீதான தன்னிச்சையான அராஜகமான தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்தும், ஈரான் நாட்டில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக தாக்கப்பட்டு உயிர்கள் பலியாவதை கண்டித்து

உலக நாடுகள் முழுவதும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈரான் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேல் , அமெரிக்கா கூட்டணியை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ஊர் உறவின் முறை ஜமாஅத் சார்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு ஈரானிய இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேல் கூட்டணி நடத்திய தாக்குதலை கண்டித்து போரை தடுத்து நிறுத்தகோரியும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *