திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
செயலர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்றார். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்புத் தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார்.
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முகமது ஷபி,நரம்பியல் மருத்துவர் அலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.உரிமை கோரப்படாத உடல்களை உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் தன்னலமற்ற மனிதநேய செயலைப் பாராட்டி தமிழ்நாடு ஆளுநர் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு ஆளுநர் விருதினை வழங்கினார்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் ஆளுநர் விருது பெற்ற விஜயகுமார் மனிதநேயப் பணியினைச் பாராட்டி நினைவு பரிசினை
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் த.இந்திரஜித் வழங்கினார். பத்மஶ்ரீ சுப்புராமன்,சங்க பொதுச் செயலாளர் ஜவஹர் ஆறுமுகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள்கவிஞர் வீ.கோவிந்தசாமி,முனைவர் சங்கரி சந்தானம் , மெர்சி டயானா, முனைவர் சாத்தம்மைப் பிரியா , மேனாள் வட்டாரக் கல்வி அலுவலர் இரா.ஜெயலட்சுமி
கவிஞர் கவி செல்வா,கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், கவிஞர் மாறன் மகா, கவிஞர் த.கமலி, கவிஞர் ஜோ.காயத்ரி, தமிழ் ஆசிரியர் செசிலி , எழுத்தாளர் சித்ரா குபேர சம்பத், எழுத்தாளர் கிரேஸ் பரிமளா, நல்லாசிரியர் மும்தாஜ் பேகம், சிறார் எழுத்தாளர் ஹாசினி, முனைவர் அருணாச்சலம், நன்மாறன், லால்குடி முருகானந்தம், வழக்கறிஞர் சேகர், கண்மணி ராஜா முகமது, கவிஞர் ஆங்கரை பைரவி, கவிஞர் மகிழை பெனடிக்ட் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.