தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்.
தாராபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் வாகனத்தில் மூலம் தண்ணீர் வழங்கியதால் சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 1வார்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இவ் வார்டு உள்ள ஓடை புறம்போக்கு தெருவில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை. மேலும் இப்பகுதியில் சேர்ந்தவர்களூக்கு வீட்டுமனைப்பட்டாவும் வழங்கப்படாததால் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லைபல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லல. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திடீரென நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை அறிந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக நான்குவழிச்சாலைக்கு வந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர். போலீசார் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நகராட்சி நிர்வாகம் உடனடிநடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் டெம்போ மூலம் குடிநீர் வினியோகம் செய்தது. சாலை மறியல் விளக்கி கொள்ளப்பட்டது.
தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் இது குறித்து பொதுமக்களிடம் பேசியதாவது
தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் யாரேனும் சாலை மறியல் அல்லது போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
சமபவ இடத்திற்கு வந்த நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் 1 வார்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், இந்த பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என புகார் தெரிவித்த நிலையில் உடனடியாக பேசி குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.