காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.22 கோடி செலவில் Hyundai Center for Education Excellence அமைத்து, தரமான கல்வி வழங்குவதில் தனக்குள்ள அக்கறையை மீள்உறுதி செய்துள்ளது.
இந்த புதிய வகுப்பறைக் கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் திறந்துவைத்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை அறங்காவலர்கள் திரு.கோபால கிருஷ்ணன் C S, திரு. சரவணன் T, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. செல்வப்பெருந்தகை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் Dr.A. நளினி, தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.T E சசிகுமார், தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சந்திரசேகர், திமுக ஒன்றிய செயலாளர் கோபால் மற்றும் பள்ளி பிரதிநிதிகள் முன்னிலையில் பள்ளி நிர்வாகக் குழு மற்றும் தண்டலம் கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
15,750 சதுர அடி பரப்பளவில், 16 வகுப்பறைகள் மற்றும் முழுமையான வசதிகள் அடங்கிய இரண்டு நவீன அறிவியல் ஆய்வகங்களுடன், இக்கட்டிடம் அனுபவரீதியிலான கல்விக்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த உள்கட்டமைப்பு, வகுப்பறை ஈடுபாடு, செய்முறை விளக்க அறிவியல் கல்வியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதுடன், பாதுகாப்பான, ஊக்கமூட்டும் கற்றல் சூழலையும் மாணவர்களுக்கு வழங்குகிறது. கல்வி ஆர்வம், அறிவியல் சிந்தனை மற்றும் மேல்படிப்பிற்கான உத்வேகம் ஆகியவற்றை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் இந்த தரமான கற்றல் தளத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1,000 மாணவர்கள் பயனடைவர்.
இந்நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பூபாலன், தண்டலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் வேலாயுதம், திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் மனோஜ்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஹூண்டாய் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்