தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னை எண்ணூரில் மத்திய துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்தியபடி போலீஸாரும் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்
சென்னை திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து மத்திய துணை ராணுவப் படையினா் உதவி ஆணையர் ஜோதி ஸ்வரன் தலைமையில் 90 பேர் தங்கியுள்ளனர் மக்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கும் எவ்வித அச்சம் இல்லாமல் செயல்படுவதற்கு முன்னேற்பாடாக கொடி அணிவகுப்பு நடைபெற்றன
எண்ணூர் காவல் உதவி ஆணையர் வெங்கட குமார் தலைமையில் துணை ராணுவத்தினர் காவல் துறையினர்இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மேற்கொண்டனா்.
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் தொடங்கிய பேரணி எண்ணூர் கடற்கரை சாலை அன்னை சிவகாமி நகர் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் சென்று எண்ணூர் மேம்பாலத்தில் நிறைவு செய்தனர்