தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு .

தாராபுரத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி தலைமையிடத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதன் முன்னோட்டமாக தாராபுரத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடந்த கொடி அணி வகுப்பிற்கு ஏ.எஸ். பி ஆறுமுகம் தலைமை வகித்தார். தாராபுரம் டி.எஸ்.பி சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், டிராபிக் இன்ஸ்பெக்டர் சஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டெல்லியில் இருந்து வந்துள்ள துணை ராணுவ படையினர், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் கொடி அணிவிப்பை மேற்கொண்டனர். தாராபுரம் காவல் நிலையத்தில் துவங்கி அணிவகுப்புபெரிய கடை வீதி,பொள்ளாச்சி ரோடு,அமராவதி கார்னர் பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில்கொடிய அணிவகுப்பு முடிவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *