கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் நலனை பேணிக்காக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நலவாரிய அட்டை வழங்கும் விழா வால்பாறை நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் குமரன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், தாட்கோ மேலாளர் ரஞ்சித்குமார், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுரேந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம் பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்
முன்னதாக தற்காலிக பணியாளர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், ஊதிய உயர்வு மற்றும் பிற சலுகைகள் வழங்கவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வாரியத்தலைவர் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்றும் நலவாரிய அட்டையினால் கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் தாட்கோ மூலம் கிடைக்கக்கூடிய மானிய கடன்கள் மற்றும் பிற சலுகைகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி அனைவரையும் பயனடைய கேட்டுக்கொண்டார்
இவ்விழா நிறைவின் போது வால்பாறை திமுக நகரக்கழகத்தின் சார்பாக பணியாளர்களுக்கு மினி சில்வர் அண்டா பரிசுப்பொருளாக வழங்கப்பட்டது
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்