கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தையில் கட்சியின் நிறுவனத்தலைவர் சக்தி படையாட்சி தலைமையில் நடைபெற்றது.அரசியல் எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் கே. சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
வாழப்பாடியார் வன்னியர் சங்கத்தின் தலைவர் குமரன் படையாட்சியார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில்,கரூர் திருச்சி மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றின் நடுவே, நெரூர் உன்னீயூர் மேம்பாலம் ரூ 101 கோடி மதிப்பீட்டில் சாலைகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதே போல அமராவதி ஆற்றங்கரையில் கோயம்பள்ளி மேலப்பாளையத்தை இணைக்கும் பாலம் ரூ.15 கோடியில் கட்டப்பட்டு இணைப்பு சாலை அமைக்கப்படாததால், ரூ 11 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதே போல,அரசு காலணி முதல் நெரூர் வழியாக திருமுக்கூடலூர், சோமுர் வரை சாலை விரிவாக்க பணிகள் 20 கோடியே 78 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் இருவழி சாலையாக மாற்றி அமைத்து தந்துள்ளார். இன்னும் எண்ணற்ற திட்டங்கள் கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வன்னியர் மக்கள் கட்சி அரசியல் எழுச்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.அரசியல் எழுச்சி பொதுக் கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ,,வன்னியர் மக்கள் கட்சியின் மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் வடிவேல், மாநில துணை பொதுச்செயலாளர் நாமக்கல் சீனிவாசன், ஈரோடு மாவட்ட செயலாளர் ராமசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட வன்னியர் மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர் கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாணோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக,கரூர் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.