தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 7- பேர் படுகாயம் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த செல்லபாண்டி வயது 55. இவரது மனைவி பால்பாண்டி அம்மாள் 48. இவர்களது மகன் பிரசாந்த் வயது 29. பிரசாந்துக்கு கோவை கணபதியைச் சேர்ந்த வீரா தேவி வயது 29 என்ற மனைவியும் உள்ளனர்.
இவர்களுக்கு 8-வயதில் பாரதி கண்ணன் என்ற மகனும் 2 1/2 வயதில் பிரணவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
பிரசாந்தினுடைய மாமனார் சிவமுருகன் வயது 50 இவருடைய மனைவி அழகேஸ்வரி வயது 44 ஆகியோர் இன்று காலை கோவையில் இருந்து வத்தலகுண்டு பகுதிக்கு குண்டடம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகில் சங்கபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7-பேரும் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் காரில் பயணம் செய்த 7-பேரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் குடும்பத்துடன் வத்தலகுண்டு பகுதியில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7- பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.