பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் இருந்து சாரலபள்ளி வரை செல்லும் புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் அம்ரித் பாரத் பாபநாசம் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும்….
பாபநாசம் ரயில் நிலையத்தில் இனிப்புகள் வழங்கி மலரி தூவி உற்சாக வரவேற்பு……
தஞ்சாவூர், பாபநாசம் மற்றும் கும்பகோணம்* வழியாக நாகர்கோவில் – சார்லபள்ளி (ஹைதராபாத்)* இடையே புதிய வகை அம்ரித் பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டது .
இந்த ரயில் சேவை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை எழும்பூர், சூளூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், நெல்லூர், சிங்கராயக்கொண்டா, ஓங்கோல், தெனாலி, குண்டூர், சட்டெனப்பள்ளி, மிரியாலகுடா, நல்கொண்டா வழியாக இயங்கும்.
இந்த நிலையில்
டெல்டா பகுதி பயணிகளின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று நாகர்கோவில் இருந்து சாரலபள்ளி (ஹைதராபாத்) வரை செல்லும் புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் (வண்டி எண். 16357/16358) பாபநாசத்தில் இன்று (13/3/2026) முதல் நின்று சென்றது .
பாபநாசம் ரயில் பயிர்கள் சங்கச் செயலாளர் சரவணன், தலைவர் சோமநாத ராவ் மற்றும் ரோட்டரி சங்கம்,லயன்ஸ் கிளப், வர்த்தக சங்க நிர்வாகிகள் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் அம்ரித் பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து டிரைவருகள் நடராஜன் , அலெக்ஸ் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
பாபநாசத்தில் இருந்து சென்னை வழியாக சார்லப்பள்ளி செல்ல வண்டி எண். 16357 நாகர்கோவில்- சாரளப்பள்ளி வண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கும், சென்னையில் இருந்து பாபநாசம் வருவதற்கு வண்டி எண் 16358 சார்லபள்ளி- நாகர்கோவில் வண்டி ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கும் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 6 15 மணிக்கு பாபநாசம் வந்து திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்லும். இந்த இரயில் வண்டியில் முன்பதிவு பெட்டிகள் (தூங்கும் வசதி)- 11ம், முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டிகள்- 6ம் மாற்றுத்திறனாளி பெட்டிகளும், அதோடு உணவு தயாரித்து வழங்கும் பேன்ட்டிரி கார் வசதியும் உள்ளது.
இந்த வண்டியில் பாபநாசம் To சென்னை செல்ல கட்டணம் முன்பதிவு வசதி கட்டணம் ₹ 255 ; சாதாரண கட்டணம் ₹160/- ஆகும்.