பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே 45-நிமிடத்தில் இடைவிடாது 5-லட்சத்து 38-ஆயிரம் முறை கராத்தே டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்….
ஆல் இந்தியா உலக சாதனையாளர் தலைவர் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பசுபதிகோவில் ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை 346-மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவ மாணவிகள் உலக சாதனைகளை பெரும் வகையில், கராத்தே டபுள் பஞ்ச் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 92-மாணவ மாணவிகள் பங்கேற்று கராத்தே டபுள் பஞ்ச் நிகழ்ச்சியை 45-நிமிடங்கள் இடைவிடாது செய்து
ஒரு நிமிடத்திற்கு 130-முறையும், 45-நிமிடத்திற்கு 5-ஆயிரத்து 800-முறை என ஆக மொத்தம் 5-லட்சத்து 38-ஆயிரம் முறை தொடர்ந்து டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை பெற்றனர்.
கராத்தேவில் புதிய சாதனையாக உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆல் இந்தியா உலக சாதனையாளர் தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு ஆல் இந்தியா உலக சாதனையாளர் விருது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் பள்ளி தலைமையாசிரியர் , சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.