மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 100 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 664 கிலோ கிராம் கஞ்சாவை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழு தலைவரும் மாநகர காவல் ஆணையருமான லோகநாதன், தலைமையில், போதைப்
பொருட்கள் ஒழிப்பு குழு உறுப்பினர் களான மதுரை மாநகர் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் மதிவாணன், தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர், மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, செல்லூர், அண்ணா நகர், காவல்நிலைய ஆய்வாளர்கள் ஆகியோர்களின் முன்னிலையில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களின் அறிக்கையுடன் கஞ்சாவைக் கைப்பற்றியிருந்த நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கான அனுமதியை ‘போதைப்பொருள் அகற்றுதல் குழு’ நீதிமன்றத்திட மிருந்துபெற்றது.
அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி பெறப்பட்ட நீதிமன்ற ஆணை யுடன் நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடியில் அமைந்துள்ள உள்ள தொழிற்சாலையில் கஞ்சா தீயிட்டு
அழிக்கப்பட்டது.