திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற மகாராஜா மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே மணியாங்குறிச்சியை சேர்ந்த மகாராஜா, நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. அவரது உடலை மீட்ட போலீசார், விபத்தை ஏற்படுத்திய தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியை சேர்ந்த கார் ஓட்டுநர் வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.