துறையூர் மார்ச் -13
திருச்சி மாவட்டம்,துறையூரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
சார்பில் (13-03-2026) இன்று காலை 6மணியளவில் “நடப்போம் நலம் பெறுவோம்-2.0″என்னும் நடைப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்திலேயே துறையூரில் முதல் நிகழ்வாக
“நடப்போம் நலம் பெறுவோம்-2.0″எனும்,8 கிமீ சுகாதார நடைபாதை திட்டத்தை முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து மக்களோடு, மக்களாக 8-கிலோமீட்டர் நடந்தனர்.

முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா முதல் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர் அரசு தலைமை மருத்துவமனை வரை நடந்து சென்று வந்தனர்.இந்நிகழ்வில் முன்னாள் மாவட்டச் சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஆரம்ப சுகாதார நிலையம் சதானந்தம், சுகாதார ஆய்வாளர் பழனிசாமி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பணியாளர்கள்,ஜேசிஐ,ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள்,காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மருத்துவ துறையினர், நகராட்சி துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள்,, ஸ்கேட்டிங் மாணவர்கள்,, பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நடை பயிற்சியின் அவசியத்தை தெரிந்து கொண்டனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *