காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை தலைவர் திருமதி ஒசானா வரவேற்புரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் மா அன்பழகன் பெண்கள் தின உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பூங்குழலி வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை வழக்கறிஞர் செல்வி மதி வர்தினி தனது சிறப்புரையின்போது பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண்களின் உரிமை கடமை பொறுப்புகள் குறித்து தெளிவாக உரை நிகழ்த்தினார்கள்.
மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து பெண் முன்னேற்றம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உணவுத்துறை பேராசிரியை திருமதி அர்ச்சனா அவர்கள் நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.