மன்னார்குடி., மார்ச்.13
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த 33 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் , பாமணியில் நரிகுறவ மக்கள் 38 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவசமாக வீடு கட்டுவதற்கு ஆணைகளையும் மாநில தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வழங்கினார்.
பயனாளிகளுக்கு பட்டாக்களை அவர்களின் இருக்கைக்கு சென்று நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது… பாதாள சாக்கடை திட்டம் குறித்து பதில் அளித்த போது தமிழ்நாடு மட்டும் அல்ல அது இந்தியாவை முழுமைக்கும் ஆகாயத்தாமரை தண்ணீரில் படர்வதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் பல இடங்களில் தண்ணீருடன் கழிவுநீர் கலக்கின்ற அசுத்தத்தின் காரணத்தினால் ஆகாய தாமரை முழுவதுமாக படர்ந்து வளரும் .
ஆகாய தாமரையை ஒழிப்பதற்கு முக்கியமான காரணம் எல்லா நகரங்களில் இருந்தும் வரும் கழிவு நீரை சுத்திகரித்து சுத்தமான நீரை ஆற்றில் விட வேண்டும் என்பதுதான் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு.
இது என்ன கதை என்று தெரியாமல் நிறைய பேர் தலைகீழாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது நகைப்புக்கு உரிய விஷயம் அரசியல் செய்யலாம் பொது மக்களுக்கு நல்லது நடக்கும்.
இந்த விஷயத்தில் அரசியல் செய்வது கீழ்த்தரமான ஒன்று . இது மாதிரியான அரசியலை தவிர்த்து விடுவது நல்லது. எங்களுக்கு அரசியலும் தெரியும் அறிவியலும் தெரியும் .
இந்த தண்ணீரை கூட நாங்கள் வீணடிக்கப் போவதில்லை சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் ஆற்றில் வீணாக செல்லாமல் இதை விவசாயிகள் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் . அத்தனை நாள் கழிவுநீர் ஆற்றுடன் சென்று கொண்டு இருந்தது.
அதை எடுத்து நிறுத்தி சுத்தம் செய்து விடுவதற்கு தப்பு தவறு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் முட்டாள்தனமாக இருக்கிறது . தேர்தல் வருகிற இந்த நேரத்தில் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்மீதும் முதலமைச்சர் மீதும் முழுமையான நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. எதிராளிகள் எதிர்க்கும் போது தான் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்று தெரிகிறது.
ரொம்ப சந்தோஷம் அண்ணன்கள் எல்லாம் இது மாதிரி இது மாதிரியான தகவல்களை சொல்வது நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை மன்னார்குடியிலும் சரி தமிழ்நாட்டில் சரி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இது எல்லாம் ஒரு உதாரணம் சாட்சியாக இருக்கிறது .
இங்கு உள்ளவர்கள் நல்லது செய்து பழக்கம் இல்லை நல்லது நடந்தாலும் வரவேற்கப் போவதில்லை அவர்களும் நல்லது செய்து பழக்கமில்லை.
அவர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டே இருக்கும் பரவாயில்லை அவர்கள் ஒரு பக்கம் கதறிக்கொண்டு இருக்கட்டும் நாங்கள் தமிழகத்திலும் சரி மன்னார்குடியிலும் சரி கட்டமைப்பை செய்து கொண்டே இருப்போம் .
ஆலங்குடியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்த சந்தேகங்களை கேட்ட பொழுது தையல் கடையில் இருந்து கழிவுகள் எப்படி வருமோ அது மாதிரி ஜவுளி பூங்காவில் கழிவுகள் வரும் .
துணி தைக்கும் வேலை மட்டுமே இந்த ஜவுளி பூங்காவில் நடைபெறும் சாயத்திற்கு இங்கு வேலை கிடையாது. துணி தைக்கும் வேலை மட்டுமே இங்கு நடைபெறும்.
இதை நான் முதலில் விளக்கி கூறக்கூடாது ஏனென்றால் ஒரு திட்டம் இதுவரை டெல்டாவில் இல்லை என மக்களிடம் ஏக்கம் இருந்தது அதை முறியடித்து தமிழக முதலமைச்சர் முதல் முறையாக டெல்டாவில் ஜவுளி பூங்காவை கொண்டு வந்தார். இந்த திட்டம் வருவதற்கு காரணம் இந்த பகுதியில் இருந்து பெண்கள் எல்லாம் திருப்பூரில் சென்று வேலை பார்க்கிறார்கள்.
அவர்கள் திருமணத்திற்கு பிறகு முடங்கி போய் விடுகிறார்கள். அந்த தொழில் அத்தோடு நின்று விடக்கூடாது என இந்தப் பகுதி பெண்களுக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது .
உங்களால் முடிந்தால் இந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதற்கு நல்ல திட்டங்களை கொண்டு வாருங்கள்.
நான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன் நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த திட்டத்தை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்பை கொடுக்கப் போகின்றோம் உங்கள் சார்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப் போகின்றோம் அந்த வேலை வாய்ப்பினை கெடுக்காதீர்கள். மன்னார்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை கெடுக்காதீர்கள்.
இதில் நீங்கள் என்ன குறையை தேடி தேடி கண்டுபிடித்தாலும் இங்கு நீங்கள் குறையை கண்டுபிடிப்பதற்கு எதுவும் இல்லை. ஒன்று வளர்ச்சி மட்டும் தான் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு வளர்ச்சியை கொண்டு வந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் என்பது தான் சந்தேகமே இல்லை திராவிட மாடல் ஒன்றில் எவ்வளவு பெரிய வளர்ச்சியை கொடுத்தோம் அடித்தளத்தை வித்திட்டோம் . திராவிட மாடல் 2.0-வில் டெல்டாவில் இன்னும் அதிக வளர்ச்சி இருக்கும் என்றார் .