மன்னார்குடி., மார்ச். 13

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெறும்.

5 ஆம் நாளான இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் ராஜகோபால சுவாமி கண்ட பேரண்டபட்ஷீ வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார்.

யானை வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்ட ராஜகோபால சுவாமியை திரளான பக்தர்கள் ஒன்று திரண்டு வழிபட்டனர். வான வேடிக்கைகளுடன் விழா கோலாக்கலமாக நடைபெற்றது.

பெருமாளுக்கு திருப்பதி உள்ளிட்ட வேறு எந்த ஆலயங்களிலும் நடைபெறாத விழாவாக மன்னார்குடி ராஜகோபால சுவாமி பங்குனி பெருவிழா உற்சவத்தில் நடைபெறும் இந்த கண்ட பேரண்டபஷி வீதி உலா என்பது தனிச்சிறப்பு மிக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *