திண்டுக்கல் நகர் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் அவர்களின் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்துடன்,கோபால சமுத்திர நடை பயிற்சி செய்யும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர்.ஐ பி செந்தில்குமார்,வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்.காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்.இளமதி ஜோதி பிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா,மாநகராட்சி ஆணையாளர்,ஒன்றிய செயலாளர்கள்,பகுதி செயலாளர்கள், தமிழ் மாநில நாயுடு பேரவை நிறுவனர்.கிருஷ்ண மூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட நாயுடு பேரவை சங்க நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.