தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு: குண்டடம் காவல் நிலையத்தில் புகார் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சிங்கரிப்பாளையத்தை சேர்ந்த குமரவேல் (த/பெ முத்துசாமி) என்பவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் டெம்போ டிராவல்ஸ் வாகனத்தை வைத்து வாடகை சேவையாக இயக்கி வருகிறார்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டதால் குமரவேல் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது டெம்போ டிராவல்ஸ் வாகனத்தின் முன்புற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து இன்று காலை குமரவேல் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அதே ஊரை சேர்ந்த கார்த்திக் (த/பெ மாரிமுத்து) மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கார்த்திக் மீது ஈஸ்வர செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக ஒரு புகார் ஏற்கனவே நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது புகாரை பெற்ற காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.