ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதி தமிழகத்தின் இரண்டாவது நெல் சாகுபடி செய்யும் பகுதியாக காணப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து இப்பகுதியில் அனைத்து வகையான நெல் வகைகள் அதிகமாக பயிரிடப்பட்டு அறுவடை செய்து வருகின்றனர் மேலும் தமிழகத்தில் தஞ்சாவூர் பகுதிக்கு அடுத்தபடியாக ஆயக்குடி பகுதியில் நெல் சாகுபடி அதிகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் வேளாண்மை துறை சார்பாக இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட நெல்லிற்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நெல் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள் விலை அதிகப்படியாக காணப்பட்டு வருவதால் விவசாயிகள் கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் தொடர்ந்து அதிகப்படியான செலவுகள் செய்து உற்பத்தி செய்யப்பட்ட நெல்லிக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் ஆயக்குடி பகுதியில் விவசாயத்துறையின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்னர் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை.
தொடர்ந்து அதிகமாக நெல் விளையும் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் தனிநபர்களுக்கு குறைந்த விலையில் நெல் விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

மேலும் நெல் நடவு செய்து போதிய வருமானம் இல்லாததால் விவசாய நிலங்கள் வீட்டுமனை பிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

உடனடியாக பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில் குமார் இந்நிகழ்வில் தலையிட்டு ஆயக்குடி பகுதியில் விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை மறு சீரமைப்பு செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஆயக்குடிக்கு அருகில் உள்ள பாலசமுத்திரம் நெய்காரப்பட்டி போன்ற பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிகப்படியாக நெல் விளையும் ஆயக்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *