திருவாரூர்., மார்ச். 14

திருவாரூர் வண்டம்பாளை பகுதியில் அமைந்துள்ள லயன்ஸ் கண் மருத்துவமனை வளாகம் முன்பு லயன்ஸ் கண் மருத்துவமனை சங்கத் தலைவர் கமலாகாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக 30 ஆண்டு காலமாக பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களையும் தொழிலாளர் நலத்துறையின் கீழ் கொண்டு வந்து பணி பாதுகாப்பு மற்றும் பணப் பயன்களை வழங்கிட வேண்டும், மற்றும் நான்கு மாத காலமாக வழங்கப்பட வேண்டிய சம்பள பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மூலம் கண் சிகிச்சை முகாம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இச்சங்கத்தின் மூலம் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய 13 லட்சம் ரூபாய் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மக்கள் சொத்தான மருத்துவமனையை பாதுகாத்து செம்மையாக நடைபெறுவதற்கு மருத்துவமனை அறக்கட்ட நிர்வாகிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான லயன்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர் ‌.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *