புதுச்சேரி, மார்ச் 14:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ரூ.69,75,078 செலவில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. இந்த பணிகள் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டன.

இத்திட்டத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி முன்னதாக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி நகராட்சியால் கட்டப்பட்ட இந்த திருமண மண்டபம் உப்பளம் வாணரப்பேட்டை, நேதாஜி நகர், வம்பாகீரப்பாளையம், சின்னக்கடை, கோலாஸ் நகர் , வீரர்வெள்ளி, பெரியபள்ளி, கீரப்பாளையம், திப்புராயபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், கழக நிர்வாகிகள், கழகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *