மத்திய அரசு. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக (Viksit Bharat) யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான நிகழ்வு புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் மற்றும் நாட்டுப்பற்று உணர்வுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் Embalam R. Selvam அவர்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு ஜனநாயகத்தின் மதிப்புகள், பொறுப்பான குடிமகனாக செயல்படுதல் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு குறித்து ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் பிராந்தியங்களில் இருந்து ஐந்து பேர் வீதம் மொத்தம் 20 நபர்கள் மத்திய பட்ஜெட் 2026 (Viksit Bharat) இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்றும் தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் பரிசாக வெற்றி பெற்ற கௌரிசங்கர், புதுச்சேரி, இரண்டாம் பரிசாக நசரத் பாத்திமா காரைக்கால், மூன்றாம் பரிசு வினித் தனித், புதுச்சேரி மாஹே, ஆகியோருக்கு சட்டப்பேரவை தலைவர் பரிசு வழங்கினார்.

இப் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் புது டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள அரசு செலவில் வாய்ப்புகள் வழங்கப்படும்.

இந்நிகழ்வுக்கு மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மாநில இயக்குனர் திரு. செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை இணை இயக்குனர் திரு. சிவா அவர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தார். மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. ரௌத்திரம் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி. காயத்ரி மற்றும் தேசிய இளைஞர் பிரதிநிதி சுதர்சன் வைத்தியநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, இளைஞர்கள் நாட்டின் ஜனநாயக அமைப்பை புரிந்து கொண்டு சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதைக் முன்னிறுத்தி சிறப்புரையாற்றினார்கள்.

இந்த விக்ஷித் பாரத் யூத் பார்லிமென்ட் 2026 நிகழ்வு, இளைஞர்களின் சிந்தனை திறனை வளர்த்தும், தலைமைத்துவம் மற்றும் ஜனநாயக விழிப்புணர்வை ஊக்குவித்தும், இந்தியாவை ஒரு வலிமையான மற்றும் முன்னேற்றமான விக்ஷித் பாரத் ஆக உருவாக்க இளைஞர்கள் முன்னேறும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *