தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்தும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. மேலும், இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாத அதிமுகவையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குண்டடம் மேற்கு, கிழக்கு ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.