தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை நடைபெற்றது. இந்த முகாமில் கம்ப்யூட்டர் கண் பரிசோதனை . கண் கண்ணாடி பரிசோதனை . தூர மற்றும் கிட்டத்து பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு கண் கண்ணாடிகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. கண்புரை நோய் கண்டறியப்பட்டு அதற்கான பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த நோய் கண்டறியப்பட்டு அதற்கான ஆலோசனை. மற்றும் சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் குறைபாடு கண்டறியப்பட்டது.

நாகை மண்டல
தலைவர் மற்றும் மன்னார்குடி வட்ட கிளை தலைவர் .தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் ந.இராசகோபாலன் முகாமை தொடங்கி வைத்தார். இரா. தங்கராசு.ஆர்.எஸ். மணி.வி. அருணாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்புச் செயலாளர் கே. அடைக்கலம். துணைத் தலைவர் எஸ். கருப்பையன் . துணைத் தலைவர் டி. கணேசன். இணைச்செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன்.இனைச் செயலாளர் சி.சுப்ரமணியன். இனைச் செயலர் டி.பார்பநா ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாமில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *