சென்னை, மணலிபுதுநகரில், 40,000 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள், மெட்ரோ ரயில் சேவைக்காக, பல கி.மீ., துாரம் பயணித்து, விம்கோ நகர் செல்ல வேண்டியு ள்ளது.

கன்டெய்னர் லாரி, கனரக போக்குவரத்து காரணமாக, இப்பகுதி மக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

எனவே, மணலிபுதுநகர் மெட்ரோ ரயில் கோரிக்கை சேவை குழு சார்பில், மார்க்கெட் பேருந்து நிறுத்தமருகே, ஆர்பாட்டம் நடந்தது.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த,300 க்கும் அதிகமான மக்கள் கூடி, மெட்ரோ ரயில் சேவை கோரி, கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *