கோவையில் க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி இப்தார் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார்..

அப்போது பேசிய அவர்,வளரும் தலைமுறையினர் இது போன்ற மத நல்லிணக்க நிகழ்ச்சிகளை நடத்துவது எதிர்காலத்தில் ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக ஏதுவாக இருக்கும் என பேசினார் தொடர்ந்து நிகழ்ச்சியில் இப்தார் நோன்பு திறப்பதற்கான ஆரம்ப உணவாக பேரீச்சை,நோன்பு கஞ்சி,குளிர்பானங்கள்,மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன..

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள்,பெண்கள் சிறுவர் ,சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவில், பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹிர் இஸ்மாயில் இப்ராஹிம் டிஸ்கோ காஜா அசாருதீன் மொய்தீன் கோவை தல்ஹா லெனின் அன்வர் பாஷா பாரத் மாதா கௌரி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *