திருத்துறைப்பூண்டி., மார்ச். 15

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மார்ச் 1 ம்தேதி காப்பு கட்டுதளுடன் துவங்கிய திருவிழா நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மண்டகப்படியும் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவும் நடைப்பெற்றது.

திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று தீமிதி திருவிழா இன்றைய தினம் ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்தனர்.

இக்கோவிலில் காலை முதலே அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மாவிளக்கு போடுதல் முடி எடுத்தல் பாலபிஷேகம் செய்தல் என பக்தர்கள் வழிபாடு செய்தனர். வருகின்ற 17 ம் செவ்வாய்க்கிழமை அன்று தெப்ப உற்சவம் நடைபெறும்.

இந்த நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கிராமவாசிகள் பொதுமக்கள் பக்த கோடிகள் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் என ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு முள்ளாட்சி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு முள்ளாட்சி மாரியம்மன் அம்மனை வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *