மன்னார்குடி.,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற    மீனாட்சி சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து பேசினார். அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனாட்சி சொக்கநாத சுவாமி கோவிலுக்கு திருமண மண்டபம் கட்டுவதற்கு  சுமார் ரூ 1 கோடியே  50 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டி தரப்படும் என உறுதியளித்தார்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில்  புதிய திருமண மண்டபத்தை  தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர மன்ற தலைவர் தா. சோழராஜன் ,நகர மன்ற துணைச் தலைவர். ரா. கைலாசம் , நகர திமுக செயலாளர் வீர கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் . முன்னிலை அறக்காவலர் குழுத் தலைவர் டி. நாகராஜன் , அறக்காவலர்கள் ஜெ. நாகையன், செல்வ.கார்த்தி , வீரமணி, சுதா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் அவைத்தலைவர் த.முருகையன், நகர மன்ற உறுப்பினர் T.புகழேந்தி , பிரதிநிதிகள் பிரபாகரன், கலைச்செல்வன், நக்மணன் , பாலகோ.முரளி , காசி. கார்த்தி, தொ.மு.ச. ரமேஷ், ஜே .பி. பிரபாகரன், தி.குமார் , தமிழ் மன்னன், கதிரவன், செந்தில், த.மு. ரவி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *