மன்னார்குடியில் இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ விழாவில் ரிஷி முகப்பர்வத வாகனத்தில் இராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மன்னார்குடி., மார்ச் 15.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் 18 நாட்கள் பிரம்மோற்சவம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 8 ஆம் நாளான இன்று இராஜகோபாலசுவாமி பட்டாபிராமர் திருக்கோளத்தில் இரு கைகளிலும் வில் மற்றும் அம்புகளை ஏந்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

யானை வாகன மண்டபத்திலிருந்து ரிஷி முகப்பருவத வாகனத்தில் எழுந்தருளிய இராஜகோபால சுவாமி கண் கவர் வான வேடிக்கைகளுடன் திரளான பக்தர்கள் புடை சூழ சுவாமி மன்னார்குடி நகரில் வீதி உலா வந்தார்.

இதில் 18 நாள் பிரமோற்சவத்தில் முக்கிய விழாக்களான தங்க சூரிய பிரபை விழா வரும் 17ஆம் தேதியும், தங்க கருட சேவை 19ஆம் தேதியும், மார்ச் 23ஆம் தேதி வெண்ணெய்தாழி உற்சவமும் நடைபெற உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *