தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை எப்படி கையாள்வது என்று அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் 8 தொகுதிகள் கொண்ட சட்டமன்ற தொகுதி
இதில் தாராபுரம் அவினாசி தனி தொகுதியாக செயல்பட்டு வருகிறது அதில் ஒரு தொகுதியாக தாராபுரத்தில் இன்று தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சியினருக்கு தெளிவுபடுத்தும் விதமாக தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியுமான பிலிக்ஸ் ராஜா அனைத்து கட்சி நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்கும் தேர்தல் சட்ட விதிமுறைகளை எடுத்துரைத்தார்
அதன் விவரம் அரசியல் கட்சிகள்கூட்டம் நடக்கும் முன் அனுமதி வாங்க வேண்டும் வாக்காளர்களை மிரட்டக்கூடாது கூட்டம் வந்து ஆன்லைன்ல பதிவு செய்ய வேண்டும் எந்த இடங்களில் பிரச்சாரம் செய்கிறோமோ கண்டிப்பா அனுமதி இல்லாமல் போக்குவரத்து பாதிப்பை ஏற்படக்கூடாது ஒரே இடத்தை இரு கட்சியினர் கேட்கக் கூடாது இது போன்ற விதிமுறைகள் உள்ளது
கண்டிப்பாக நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் என்பது கடைபிடித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் அரசு வாகனத்தை கட்சி ரீதியான பயன்படுத்தக் கூடாது மாவட்டம் மாநில அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது அனைத்து பகுதிகளும் ஒரே மாதிரியான தேர்தல் விதிமுறைகள் மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கட்சி சார்ந்த தலைவர்கள் புகைப்படம் வேட்பாளர்கள் புகைப்படம் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறக் கூடாது அனுமதி பெற்ற சுவர்களில் மட்டும் விளம்பரம் செய்ய வேண்டும் அப்படி இருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் இந்த விளக்க கூட்டத்தில் திமுக காங்கிரஸ் அதிமுக பாஜக பாமக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகன் திருநாவுக்கரசு திருமா ரகு உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.