திருவாரூர்., மார்ச். 16

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோசந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கருட் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது. திருவாரூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் 54 இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த 54 வாக்கு சாவடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தற்போது துணை ராணுவ கம்பெனி படை முத்துப்பேட்டையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4 கம்பெனி படைகள் வர உள்ளனர் எனவும் ரூபாய் ஐம்பதாயிரம் பணத்திற்கு மேல் கொண்டு செல்பவர்கள் எந்த விதமான ஆவணங்கள் காட்ட வேண்டும் என்ற கேள்விக்கு ஏடிஎம் கார்டு ரசீது அல்லது வேறு ஏதாவது பணப்பணிவர்த்தனை செய்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரம் வைத்திருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதேபோல் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேல் உள்ள பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தனியார் வங்கிகள் கொடுக்கும் கடன்களுக்கு அரசு தடை விதிக்கவில்லை என்றும் தேர்தல் விதிமுறைகள் அறிவிப்புக்கு வந்த பிறகு 24 மணி நேரத்திற்குள் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது.

மற்றும் 48 மணி நேரத்திற்குள் தனியார் மையம் உள்ள விளம்பரங்கள் அரசியல் சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும் எனவும் மாவட்டத்தில் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்க உத்தரவிட்ட நிலையில் பலர் ஒப்படைத்துள்ளனர் ஒரு சிலர் மட்டும் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *