தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துறையூரில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் (2026)நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காள பொதுமக்கள் அச்சம் இல்லாமலும் பாதுகாப்புடனும் தங்களது வாக்குரிமையை நிலை நாட்டிட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் துறையூர் காவல் துறை சார்பில் முசிறி டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.
இந்த கொடி அணி வகுப்பு பேரணி காவல் நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், திருச்சி ரோடு, பாலக்கரை, பெரம்பலூர் ரோடு,பெரிய கடை வீதி, சிலோன் ஆபீஸ், ஆஸ்பத்திரி ரோடு மீண்டும் திருச்சி ரோடு வழியாக காவல் நிலையம் வந்தடைந்தது. இதில் காவல் ஆய்வாளர்கள் ஓம் பிரகாஷ் (துறையூர்),சக்தி (உப்பிலியபுரம்),சுரேஷ் (தா.பேட்டை), சரவணன் (தொட்டியம் ), விஜயலட்சுமி (காட்டுப்புத்தூர்),செல்லதுரை (முசிறி ), துறையூர் உதவி காவல் ஆய்வாளர் தினேஷ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா, காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜதுரை, தங்கம்,ரவி, ஆசைத்தம்பி மற்றும் துறையூர், ஜெம்புநாதபுரம், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், தா.பேட்டை உள்ளிட்ட காவல் துறையினர், துணை ராணுவ படையினர், ஆயுதப்படையினர் , ஊர்க்காவல் படையினர் உள்பட சுமார் 225பேர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்