மன்னார்குடி., மார்ச்.17
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நறுவெளி களப்பால் சேர்ந்த பொதியப்பன் – தனலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டனுக்கும் (32) . கச்சனம் வன்னியடி கோமல் பகுதியை சேர்ந்த உத்திராபதி – மைதிலி தம்பதியின் மகள் விக்டோரியா (28) இருவருக்கும் திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது.

தற்போது இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. விக்டோரியா விற்கும் மணிகண்டனுக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் விக்டோரியா 9 மாத கைக்குழந்தையை மணிகண்டனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது .

காலை 7 மணியளவில் மணிகண்டன் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி விக்டோரியா கழிவறையில் தூக்குமாட்டி உறவினரிடம் இறந்ததாக கூறியுள்ளார்.

அதனையடுத்து விக்டோரியா பெற்றோர்கள் மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி களப்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனையடுத்து மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் விக்டோரியாவின் உடல் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கபட்டது . விக்டோரியாவின் இறப்பிற்கு காரணமான கணவரை கைது செய்ய வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் என விக்டோரியாவின் உறவினர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் வேதாரண்யம் , திருச்சி , திருவாரூர் , திருத்துறைப்பூண்டி சாளையில் போக்குவரத்து 1 மணி நேரமாக பாதிப்பு ஏற்பட்டது . சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மன்னார்குடி காவல் துறையினர் முறையாக விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *