C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர், மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

கடலூர் பேருந்து நிலையத்தில், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தால் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம் வாக்கு நமது உரிமை,என் வாக்கு என் கடமை மறவாமல் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகள் ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு பேரணி கடலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி சொரக்கால்பட்டு வரை 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வினை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே வாக்காளர்கள் அனைவரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தனது வாக்கினை பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி,மகளிர் திட்ட அலுவலர் ஜெய்சங்கர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *