C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டதை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல்ழ நடத்தை விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டதை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் வங்கியாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது,
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின்போது சமமான, ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களுக்கிடையே உருவாக்கிடவும், பணம் மற்றும் பொருட்கள் மூலமாக வாக்காளர்களுக்கிடையே தேவையற்ற செல்வாக்கினை செலுத்துவதை தடுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கியாளர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிவர்த்தனை நிகழும்போது அவ்விவரம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். ஒரு வங்கிக்கணக்கில் கடந்த இரண்டு மாதங்களாக பணிபரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு இலட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு/பற்று செய்வது, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு RTGS மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறுவது குறித்த விவரங்கள் உடன் தெரிவித்திட வேண்டும்.
வேட்பாளர்/அவரது மனைவி/சார்ந்தோர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு இலட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு/பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களை தெரிவித்திட வேண்டும் என வங்கியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருநாவுக்கரசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.