தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாக
எழுத்தாளர் த.ஜெயகாந்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி பேரவைக்கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆட்சிக்குழு(பொ) உறுப்பினர், பேராசிரியர் முனைவர் பெ.பாரதஜோதி தலைமை தாங்கினார்.இவ்வறக்கட்டளையின்
ஒருங்கிணைப்பாளர் இலக்கியத்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர்,
முனைவர் ஜெ.தேவி அனைவரையும் .வரவேற்றார்
சிறப்பு விருந்தினர் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழாய்வுத்துறை,இணைப்பேராசிரியர், முனைவர் பொ.இரமேஷ் பதிவாளர்(பொ)அவர்களால் சிறப்பு செய்யப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் , த.ஜெயகாந்தன் பற்றி
படைப்புகளையும் அவரின் பெருமையையும் எடுத்துக்கூறி மாணவர்களுக்கு தமிழ்ப் படித்து வாழ்வில் ஏற்றமுற வேண்டும் வாழ்த்துரை வழங்கினார்.
இலக்கியத்துறைப் பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை
படைப்புலகின் சிங்கமான எழுத்தாளர் த.ஜெயகாந்தன் அவர்களைப் போற்றி
மாணவர்களும் அவ்வாறு விளங்குவார்கள் என நோக்கவுரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் “த.ஜெயகாந்தன் பனுவலும்
வாசிப்பும்” எனும் பொருண்மையில் நிகழ்வின் மையமாக இலக்கியத்துறை எப்படி
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இதயமாக விளங்குகிறதோ அப்படித்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள் எல்லாம் வெறும் எழுத்துக்கள் அல்ல..அவரின் இதயமாகும். மாறுப்பட்ட சிந்தனையாளர் த.ஜெயகாந்தன் அவர்கள் மறைந்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களிடம் தாம் எழுதிய கலைஞரின் இதயம்” என்கிற நூலுக்கு வாழ்த்துரை எழுதித்தரக் கேட்டதாகவும் அந்நூலினை வாசித்து திருத்தம் செய்து புதியக்கருத்து என்று பாராட்டியவர் வாழ்த்துரை எழுத மறுத்துவிட்டார். காரணம் நான் கொள்கைக்கு எதிராக செயல்படமாட்டேன்.
வேண்டுமானால்கி.வீரமணி அவர்களிடம்வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னதாகவும் பதிவு செய்தார். இப்படி தாம் கொண்ட கொள்கையால் தனித்து அடையாளம் காணப்பட்டவர்கள் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் தோழர் நல்லக்கண்ணு அவர்களும். அப்படிப்பட்ட எழுத்தாளர் அவர்களின் படைப்புகளைப் போற்றும் வகையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எழுத்தாளரின் படைப்புலகம் பற்றி நிகழ்வு நடத்தப்பட்டது. இவ்வாறாக அவரின் படைப்புகளை நடுவுநிலையோடு ஆய்வாளர்கள் தனது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தி தனது உரையினை நிறைவு செய்தார்.
மேலும் இலக்கியத்துறையின் உதவிப்பேராசிரியர் இரா.தனலெட்சுமி எழுத்தாளர் த.ஜெயகாந்தனின் படைப்புகளில் பெண் என்பவளின் இருப்புப் பற்றிய பதிவினை கூறி நன்றி கூறினார். இலக்கியத்துறை முதுகலை முதலாமாண்டு மாணவிகள் செல்வி மா.கீர்த்தனா மற்றும் தமிழ்மதி சுரேஷ் ஆகியோர் இணைப்புரை வழங்கினார்கள்